Tuesday, October 16, 2012

சுமைதாங்கி


சுமைதாங்கி 

வெற்றிடங்களுக்கிடையே தெரியும் சில வரிகள் 
மிகுந்த சுமைகளை கொண்டிருந்தன

சுமைகளின் அழுத்த மிகுதியால் 
சிதிலமடைந்திருந்தன சில வரிகள் 

எஞ்சிய வரிகளை மீட்கும் பொருட்டே 
வாசிக்க வேண்டியதாயிற்று 

தன் சுமைகளை என் மேல் ஏற்றிவிட்டு 
இளைப்பாறிக்கொண்டிருக்கிறது 

 அப்புத்தகம்

No comments:

Post a Comment