Friday, October 26, 2012

ஸ்ரீவித்யா கவிதைகள்



எழுத்தோவியம் 


விழிகள் சற்று அசைவுகொள்ள, 
விடியல் என்னை பற்றிகொள்ள, 
ஆதவன் சற்று ஆவேசமாய் 
ஆதாரம் காட்டிப் போக, 
இரவு நேர மழைச்சாரலில் 
இன்பம் தட்டிய நினைவலைகள்
கண்ணயர்ந்த காலைப்பொழுதை
கவித்துவமாய் நினைவூட்டியன!!!

கானல் நீராய் தலைசாய்த்து
கவலை துடைத்த கார்மேகத்தினை 
தினைக்கதிரை தலைசாய்து 
தினம்தினம் நான் பூஜிப்பேன்! 
இயந்திரத்தின் இசைமடியில் 
இயற்கைக்கும் தனி மேடையாம்!
எழுத்துக்களால் உயிர்ரோவியம்
எழுதுகின்றது உனக்கு!!! 

ஸ்ரீவித்யா

No comments:

Post a Comment